தமிழ்நாடு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* இதையடுத்து கேன் குடிநீர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

* இந்நிலையில் வழக்கின் விசாரணை, இன்று வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

* வாதங்களை கேட்ட நீதிபதிகள், மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

* விண்ணப்பத்தோடு, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* மேலும், சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

* குடிநீர் ஆலைகள் மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் பிற தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

* அனைத்து மாவட்டங்களிலும், நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

* இந்நிலையில் தீர்ப்பின் எதிரொலியாக, கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்