சென்னை எழும்பூரில் சுமார் 26 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள நீதிமன்ற கட்டடத்தை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள்,, சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமாணி, நீதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், சம்பந்தபட்டவர்கள் வெற்றி பெற்றாலும் கூட அது சோர்வை ஏற்படுத்துவதாக கூறினார். நீதிமன்றங்கள் விரைந்து நீதி வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.