தமிழ்நாடு

குரூப் 2 விதிகளை எதிர்த்து வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையும் அனுமதிக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கும்,தேர்வாணையத்துக்கும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
சார் பதிவாளர், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட குருப் 2 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 10 ம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. அதில், பட்டபடிப்பு முடித்தவர்கள் மட்டுமே தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, சென்னை சூளைமேட்டை சேர்ந்த இளையபெருமாள் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி ஆண்டு பட்டப்படிப்பு மாணவர்களும் குருப் 2 தேர்வில் விண்ணப்பிக்க அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு 23 ம் தேதிக்குள் பதில் அளிக்கும் படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளருக்கு உத்தரவிடப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்