தமிழ்நாடு

"தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்" - முதலமைச்சர், ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அறிவுரை

தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என முதலமைச்சர் பழனிச்சாமி மற்றும் திமுக தலைவர் ஸ்டாலினை, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தந்தி டிவி
கொடநாடு கொலை , கொள்ளை விவகாரங்களில் தம்மை தொடர்புபடுத்தி ஸ்டாலின் தொடர்ந்து பேசி வருவதாக அவர் மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்தது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் தொடர்ந்து ஸ்டாலின் அவதூறாக பேசி வருவதாகவும் இதனால் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி முதலமைச்சர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி இளந்திரையன் முதல்வரும், ஸ்டாலினும் தனிநபர் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்