தமிழ்நாடு

படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் - பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் கோரிக்கை

சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தந்தி டிவி

சத்தியமங்கலம் அருகே பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மேற்படிப்பை தொடர தமிழக அரசு உதவ வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அங்குள்ள காளிதிம்பம் மலைகிராமத்தை சேர்ந்த சாமிநாதன்- மாரம்மாள் தம்பதி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டனர். இவர்களின் மகள் சிவரஞ்சனி, மகன் ஹரிபிரசாந்த் ஆகிய இருவரும் வருவாயின்றி, மேற்படிப்பை தொடர முடியாமல் பரிதவிக்கின்றனர். உறவினர்கள் கைவிட்டதால் சகோதரனை படிக்க வைக்க மாணவி சிவரஞ்சனி, கூலி வேலைக்கு செல்கிறார். ஆடிட்டராக வேண்டும் என்ற கனவுடன் கல்லூரி சென்றும் படிப்பை தொடரமுடியாத நிலை இருப்பதாக வேதனை தெரிவித்த சிவரஞ்சனி, பெற்றோரை இழந்து நிற்கதியான நிலையில் இருக்கும், தானும், தனது சகோதரனும் மேற்படிப்பை தொடர அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு