நெல்லை மாநகரத்தில் 60 ஆண்டு பழமையான பேருந்து நிலையம் இயங்கி வந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக பழைய பேருந்து
நிலையம் இடிக்கப்பட்டது. இதனால் பல நாட்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகரப் பேருந்துகளும் நின்று செல்ல தேவையான இடம் இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நெல்லை மாநகரில் பேருந்துகள் நின்று செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்வதுடன் பழுதடைந்த சாலைளை சீர் செய்ய வேண்டும் என்பதும் நெல்லை மக்களின் கோரிக்கையாக உள்ளது.