#dharmapuri #heavyrain #rainfall #thanthitv தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மாரண்டஹள்ளியில் 118 மில்லி மீட்டர் கனமழை பெய்ததால், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, கால்நடை மருந்தகம், சாலை மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.சின்னாற்றுக்கு மழைநீர் செல்லும் கால்வாய் அடைக்கப்பட்டுள்ளதால், தண்ணீர் வெளியேற வழியின்றி பொதுமக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம் ஜே.சி.பி. மூலம் கால்வாய் அமைத்து, மழைநீரை சின்னாற்றுக்கு வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. ழைக்காலங்களில் இதுபோன்ற பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க, பஞ்சப்பள்ளி சாலையின் குறுக்கே முறையான கால்வாய் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.