ராணிப்பேட்டை - 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை...
வேலூர் மாவட்டம் ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ந்த இதமான சூழல் நிலவியதோடு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பெய்த கனமழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஒசூர் பகுதிகளில் சாரல் மழை : மக்கள் மகிழ்ச்சி...
ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஓசூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை மாறியது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்