தமிழ்நாடு

"சிமி" அமைப்பு தடை விதித்த விவகாரம் - குன்னூரில் விசாரணை துவக்கம்

"சிமி" அமைப்பு தடை விதித்த விவகாரம் குறித்த தீர்ப்பாய விசாரணை குன்னுாரில் நடக்கிறது.

தந்தி டிவி

"சிமி" அமைப்பு தடை விதித்த விவகாரம் குறித்த தீர்ப்பாய விசாரணை குன்னுாரில் நடக்கிறது. சிமி எனப்படும் இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்த தடை கடந்த ஜனவரி 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்ததால் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான தீர்ப்பாயம் பல்வேறு இடங்களிலும் இதற்கான விசாரணையை நடத்தி வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னுாரில் நேற்று தொடங்கிய விசாரணை, 3 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி குன்னுார் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கு நீதிமன்ற வளாகமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்காக, நீதிபதி முக்தா குப்தா தலைமையிலான 22 பேர் அடங்கிய குழுவினர் வந்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்