கோவை மாவட்டம் நீலாம்பூர் இணைப்புச் சாலையோரத்தில், குவியல் குவியலாக நூற்றுக்கணக்கான மாட்டின் மண்டை ஓடுகள் கொட்டப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து கேரளத்தில் இருந்து மருத்துவம் மற்றும் இறைச்சிக் கழிவுகள், கடத்தி வரப்பட்டு கொட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.