தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசிய அவர் நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் கொரோனாவுக்காக பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தற்போது கூறும் ஆலோசனைகள் , ஏற்கனவே அரசால் செயல்படுத்தப்பட்டு விட்டது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.