தேனி மாவட்டத்தில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் நோய்கள் பரவாமல் தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். புகை மருந்து அடித்தல், நிலவேம்பு கஷாயம் வழங்குதல் உள்ளிட்ட சுகாதாரத்துறை மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.