#Namakkal #penaltynotice #penalty #ThanthiTV
Namakkal | இறந்து ஒரு வருடம் ஆச்சு.. 4 மாதத்திற்கு முன்பு நேரில் ஆஜரான இளைஞர்? - அபராத நோட்டீஸால் அதிர்ச்சி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், இறந்து ஓராண்டான இளைஞருக்கு அபராதம் செலுத்தக் கோரி வருவாய்த்துறை அதிகாரிகள் அனுப்பிய கடிதத்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட கலைமகள் வீதியைச் சேர்ந்த பழனிவேலின் மகன் அரவிந்தன், கடந்த 2025 அக்டோபர் 15-ஆம் தேதி சித்தோடு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானி அருகே உணவகத்தில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரைத் தவறாகப் பயன்படுத்தியதாக, அரவிந்தனுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கடிதம் வந்துள்ளது. மேலும், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இறந்து ஓராண்டான தனது மகன், நான்கு மாதங்களுக்கு முன்பு எப்படி நேரில் ஆஜரானார் எனக் கேள்வி எழுப்பியுள்ள பெற்றோர், அவரை அதிகாரிகள் முன் அழைத்து வருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.