தமிழ்நாடு

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி
கோவை மாவட்டம் வேலப்பட்டி கிராமத்தில் உள்ள ராஜ வாய்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ராஜ வாய்க்கால் முறையாக தூர்வாரப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் ஏரி, குளம் என எத்தனை நீர்நிலைகள் உள்ளன என்பது குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது என்பது தொடர்பான, விரிவான அறிக்கையை தமிழக அரசு வரும் 29ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’