தமிழ்நாடு

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா புகார் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என்றுதமிழக போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

தந்தி டிவி

சென்னை - ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது, பணப்பட்டுவாடா புகார் தொடர்பான வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட மூவர் பெயரை, வருமான வரித்துறை குறிப்பிட்டும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என்றுதமிழக போலீசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

ஆர்.கே. நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பான வழக்கு, நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. திமுக வேட்பாளர் மருது கணேஷ் தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர் வில்சன், பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக வருமான வரித்துறை அளித்த அறிக்கையில், விஜயபாஸ்கர், ரம்யா மற்றும் சின்னத்தம்பி ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தும், முதல் தகவல் அறிக்கையில், இந்த மூவரின் பெயர்களும் குறிப்பிடப்படவில்லை என்பதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஏன் அடையாளம் காண முடியவில்லை என கேள்வி எழுப்பினர். வழக்கை சிபிஐ- க்கு மாற்றக்கோரிய மனுவுக்கு, ஜனவரி 10 ம் தேதிக்குள் பதில் அளிக்க அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்