தமிழ்நாடு

இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்...

கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர்.

தந்தி டிவி
கோவை வழியாக கேரளாவுக்கு இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை கடத்திய 5 பேரை பாலக்காடு போலீசார் கைது செய்துள்ளனர். கோவை வழியாக பாலக்காடு வரும் ரயிலில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாலக்காடு ரயில் நிலையத்தில் சோதனையிட்ட போலீசார் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த 5 பேரை பிடித்து விசாரணை செய்தனர். இரண்டரை கோடி ரூபாய் ஹவாலா பணத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்