தமிழ்நாடு

சிறுமி ஹாசினி கொலை வழக்கு : குற்றவாளி தஷ்வந்துக்கு மேலும் ஓரு ஆண்டு சிறை

தஷ்வந்துக்கு, மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி
சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்த தஷ்வந்துக்கு, மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த வருடம் சிறுமி ஹாசினியின் தந்தை சாட்சி சொல்ல, செங்கல்பட்டு நீதிமன்றம் வரும் போது, சாட்சி சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த, செங்கல்பட்டு நடுவர் நீதிமன்ற நீதிபதி சுபாஷினி நேற்று இந்த தீர்ப்பை வழங்கி உள்ளார்.சிறுமி ஹாசினி கொலை வழக்கில், தஷ்வந்துக்கு, 46 ஆண்டுகள் சிறை மற்றும் பின்னர் தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என , ஏற்கனவே செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது

EPS || CM Stalin || EPSக்கு நன்றி சொன்ன CM - சட்டப்பேரவையில் நடந்த எதிர்பாரா `Moment'

MK Stalin | OPS | TN அரசியலில் பெரும் திருப்பம் - மொத்தத்தையும் மாற்றிய OPS-ன் ஒரே சந்திப்பு

TVK Vijay | "சிபிஐ மூலம் தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கிறது பாஜக" - ஓப்பனாக போட்டுடைத்த தவெக அருண்ராஜ்

DMK| MK Stalin | தேர்தல் ஆட்டத்தை ஆரம்பித்த திமுக - அறிவாலயத்திற்கு படையெடுக்கும் புள்ளிகள்

Gold Price Today | நேற்று ஏறிய தங்கம் விலை இன்று திடீர் சரிவு