சென்னை தண்டையார்பேட்டை நேதாஜிநகரை சேர்ந்த மாற்றுத்திறனாளி சைன்யிஷா, சென்னை தண்டையார்பேட்டையில் ரயில்வே இருப்பு பாதை தொழிலாளியாக பணியாற்றியுள்ளார். பின்னர் தன் உடல் நிலையால் வேலையை இழந்த இவர், தன் பிறந்தநாளை , தான் வேலை செய்த இடத்தில் கழிக்க நினைத்துள்ளார். அதன்படி தண்டையார்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை அருகே காலியான இடத்தில் அமர்ந்திருந்த சையின்ஷாவை, அங்குவந்த வடமாநிலங்களை சேர்ந்த ரயில்வே போலீசார் லத்தியால் தாக்கியதாக தெரிகிறது. இதில் முதுகு ,கை உள்ளிட்ட பாகங்களில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பிறந்தநாள் அன்று மாற்றுத்திறனாளி ஒருவர் ரயில்வே போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.