எச்1 பி விசா விவகாரத்தில், இந்திய மாணவர்கள் இல்லையெனில் அமெரிக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என இந்திய தொழில் கூட்டமைப்பு கல்விப்பிரிவு பிரதிநிதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி அளித்த அவர், உயர்கல்விக்காக அமெரிக்காவை அதிகமான இந்திய மாணவர்கள் தேர்வு செய்வதற்கு காரணமே படிப்பை முடித்ததும் அங்கேயே வேலையில் சேர வேண்டும் என்பதற்காகத் என்றும், ஆனால் தற்போது டிரம்ப் எடுத்துள்ள முடிவு இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.