நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ பதவியை வசந்தகுமார் ராஜினாமா செய்தார். கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி.யாக தேர்வான நிலையில், எம்.எல்.ஏ பதவியை அவர் துறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று, தலைமைச்செயலகத்திற்கு சென்ற வசந்தகுமார், சபாநாயகர் தனபாலிடம் எம்எல்ஏ பதவியில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்துள்ளார். இதையடுத்து, நாங்குநேரி காலியான தொகுதியாக அறிவிக்கப்பட்டு, விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.