காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் துபாய், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் தென்னிந்திய மகப்பேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்ட இரண்டு நாள் கருத்துரங்கம் தொடங்கியது. இந்த கருத்தரங்கத்தினை பிரபல மகப்பேறு மருத்துவர் கமலாசெல்வராஜ் தொடங்கி வைத்தார்.
தற்போதைய வாழ்க்கை முறையினால் கருத்தரித்தல் குறைபாடுகள் அதிகரித்து வருவது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதம் நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கமலா செல்வராஜ், யூ டியூப் மூலம் பிரசவம் பார்ப்பது தவறானது என தெரிவித்தார்.