தமிழ்நாடு

குட்கா பொருட்கள் பறிமுதல் : சட்டக்கல்லூரி மாணவர் கைது

குட்கா பொருளை ஆட்டோவில் வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னை திருவொற்றியூரில் குட்கா பொருளை ஆட்டோவில் வைத்து கடைகளுக்கு சப்ளை செய்து வந்த சட்டக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கார் ஒன்றில் இருந்து ஆட்டோவில் குட்கா மூட்டைகள் ஏற்றுவதை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக அனீஸ் என்ற சட்டக்கல்லூரி மாணவரை பிடித்து விசாரித்த போது, ஆந்திராவில் இருந்து குட்கா கொண்டு வந்து கடைகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து சித்தூரில் உள்ள குடோனில் இருந்து மூட்டை மூட்டையாக குட்கா பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்