தமிழ்நாடு

குரு பெயர்ச்சி - கோவில்களில் சிறப்பு பூஜை

குரு பெயர்ச்சியை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவிடைமருதூர்

திருவிடைமருதூரில் பிரசித்தி பெற்ற நவக்கிரகத்தலமான சூரியனார் கோயிலில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு ஹோமம், அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே தொடர்ந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மதுரை

இதேபோல், மதுரை குருவித்துறை குரு பகவான் கோவிலில், குரு பெயர்ச்சியை ஒட்டி, யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நள்ளிரவில் இருந்து, கோவிலில் சிறப்பு பரிகாரம் யாகம் நடைபெற்றது. யாகத்தின் போது, புனித நீரை குருபகவானுக்கு ஊற்றி சிறப்பு பூஜைகள் செய்தனர்.

திருவொற்றியூர்

திருவொற்றியூர் வடகுரு ஸ்தலமான குரு தட்சிணாமூர்த்தி கோயிலில், சிறப்பு ஹோமங்களும், பரிகார பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றது. இதில் எராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் உள்ள பழமை வாய்ந்த சிவன் கோவிலிலும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திரவியங்கள், மஞ்சள் துணி, கொண்டைக்கடலை போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்