தமிழ்நாடு

ஜி.எஸ்.டியால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு ? - ஸ்டாலின்

ஜி.எஸ்.டி.யால் தமிழகத்திற்கு இதுவரை ஏற்பட்ட இழப்பீடு எவ்வளவு என்று முதலமைச்சர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

தந்தி டிவி

சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தை செயல்படுத்தியதன் தொடர்ச்சியாக மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையை, போதிய ஜி.எஸ்.டி. வருவாய் இல்லாததால் வழங்க முடியாது என்று மத்திய அரசு கைவிரித்துள்ளதாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் கண்டு கொள்ளாமல் இருப்பதாகவும் , அதற்காக தமது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஜி.எஸ்.டியால் ஏற்படும் இழப்பீடு ஐந்து ஆண்டுகளுக்கு ஈடுகட்டப்படும் என்றும், குறிப்பாக இரு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்றும் அளித்த உறுதிமொழியை மத்திய அரசு நிறைவேற்ற தவறி விட்டதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜி.எஸ்.டி. சட்டத்தால் தமிழ்நாட்டிற்கு ஏற்படும் 9ஆயிரத்து 270 கோடி ரூபாய் இழப்பீடு பற்றி அ.தி.மு.க. அரசு சிறிதும் அக்கறை காட்டவில்லை என்றும், 2019-20-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட "ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையான சுமார் 5 ஆயிரத்து 909 கோடி ரூபாய் நிலுவை தொகை பெறப்பட்டதா என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜி.எஸ்.டி சட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு எவ்வளவு?அதில் இதுவரை மத்திய அரசிடமிருந்து பெற்றது எவ்வளவு? நிலுவையில் உள்ள தொகை எவ்வளவு? என்பது குறித்த விவரங்களை தமிழக மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், முதலமைச்சரும், நிதியமைச்சரும் உடனடியாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்