தமிழ்நாடு

ஜி.எஸ்.டி.யை செலுத்தினால், 70% தள்ளுபடி - மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார்

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித்துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்தினால், 70 சதவிகித வரி தள்ளுபடி கிடைக்கும் என மதுரை மண்டல வணிக வரித் துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். மதுரை காமராசர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கில் வியாபாரிகள், ஜி.எஸ்.டி. வரி செலுத்துவோருக்கான கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அரசின் சப்கா விஸ்வாஸ் திட்டத்தின் கீழ், 2019 ஆம் ஆண்டு முடிவு வரை உள்ள ஜி.எஸ்.டி. பாக்கியை செலுத்த வேண்டும் என ஆணையர் சிவக்குமார் கூறினார். அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல், வியாபாரிகள் எளிதில் அணுகும் வகையிலான ஜி.எஸ்.டி. முறை அமலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற, குமரி முதல் திருச்சி வரையிலான வணிகர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்