தமிழ்நாடு

சென்னையில் தரை மட்டமாக இடிப்பு - களத்தில் இறங்கிய அதிகாரிகள்

தந்தி டிவி

சென்னை கிழக்கு கடற்கரை சாலை திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான சாலைகள் விரிவுபடுத்தும் பணி கடந்த ஒரு வருடமாக நடந்து வருகிறது. இந்நிலையில் நீலாங்கரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் முறையாக நோட்டீஸ் வழங்கி நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் இடித்து நிலங்களை மீட்டனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மீட்கப்படும் நிலத்தை தங்கள் ஊர் கோயில் சொத்தாக எழுதி வைக்குமாறு கோரிக்கை வைத்து முற்றுகையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 8 கோடி ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்