தமிழ்நாடு

20 வயதே ஆன ஆணுடன் பட்டதாரி பெண்ணுக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி : சேலத்தில் பரபரப்பு

சேலம் அருகே மைனர் ஆணுடன் கட்டாய திருமணம் செய்து வைக்க முயன்றதால் பட்டதாரி பெண் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சேலம் மாவட்டம் தாராபுரம் பகுதியை சேர்ந்த ரம்யா பட்டபடிப்பை முடித்துள்ளார். இவர் எடப்பாடி பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்ற பொறியியல் கல்லூரி மாணவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

ரம்யா காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த பெற்றோர், அவரை 20 வயதே ஆன அருள்குமார் என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைக்க முயற்சி செய்துள்ளனர். அதற்கு ரம்யா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்ததையடுத்து அவரை அருள்குமார் வீட்டிலேயே அடைத்து வைத்துள்ளனர்.

இந்த நிலையில், அருள்குமார் வீட்டில் இருந்து தப்பி சென்ற ரம்யா, தனது காதலர் சிவக்குமாரின் உறவினர்களை உதவிக்கு அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

மேலும் தன்னை காதலருடன் சேர்த்து வைக்க வேண்டும் எனவும் அவர் மனுகொடுத்தார். இதனையடுத்து இந்த மனுவை விசாரித்த காவல்துறை உயர் அதிகாரிகள் ரம்யாவிடம் விசாரணை நடத்த ஓமலூர் மகளிர் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டனர்

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்