தமிழ்நாடு

அரசு பஸ் டயரிலே முடிந்த அரசு பஸ் டிரைவரின் வாழ்க்கை.. சென்னை சாலையில் துடித்து அடங்கிய மூச்சு

தந்தி டிவி

சென்னையில், பைக்கில் சென்று கொண்டிருந்த முதியவர் ஓருவரின் உயிர், நொடியில் நிகழ்ந்த எதிர்பாரா விபத்தில் சிக்கி பறிபோயிருப்பது மனதை ரணமாக்கி இருக்கிறது. நடந்தது என்ன?.. பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

சென்னை, வேளச்சேரியின் பிரதான சாலையில் இருந்த பள்ளத்தால் ஒரு உயிர் பறிபோயிருக்கிறது... அரசு பேருந்து ஓட்டுநரான 55 வயது முதியவர் முருகேசன், பணிக்கு சென்று கொண்டிருந்த போது, அரசு பேருந்தின் சக்கரத்தில் சிக்கியே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்...

சைதாப்பேட்டையில் உள்ள பேருந்து பணிமனைக்கு முருகேசன் சென்றுகொண்டிருந்த போதுதான் இந்த விபரீதம். வேளச்சேரியின் பிரதான சாலையில் இருந்த பள்ளத்தால் பைக்குடன் தடுமாறிய முருகேசன், பின்னால் வந்தவர் மோதியதில் கீழே விழ... அவ்வழியே சென்ற பேருந்தின் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...

வழக்கம்போல் விபரீதம் நடந்த பின், சாலையில் இருந்த அந்த பள்ளத்தை அக்கம்பக்கத்தினரும், போலீசாரும் மண்ணை நிரப்பு மூடியிருக்கின்றனர்.. வேளச்சேரி பிரதான சாலை மட்டுமல்ல.. சென்னையில் பல சாலைகளிலும் இந்த நிலைமைதான்..

அதுவும் மழைக்காலம் வேறு நெருங்கி வரும் சூழலில், ஒரு வித பீதியுடனே சென்னை வாசிகள் சாலையில் செல்லும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.. இந்நிலையில், இந்த மரணம் முருகேசனின் குடும்பத்தினரை நிலைகுலைய செய்து பெரும் சோகத்தை உண்டாக்கி இருக்கிறது...

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS