அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான பரிந்துரையை ஜனவரி 31ம் தேதிக்குள் அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்ப்பட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த பரிந்துரை அறிக்கையை, ஜனவரி 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 300 மாணவர்களுக்கு குறையாமல் படிக்கும் பள்ளிகளில் இத்தகைய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.