மருத்துவ உயர்கல்வியில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.