ஆசிரியை அடித்ததில் காயமடைந்த மாணவன்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கஸ்தம்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் திஸ்வராம் என்ற மாணவனை ஆசிரியர் இரும்பு ஸ்கேலால் அடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவன் தன் பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளியின் முன் திரண்ட மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.