தமிழ்நாடு

மாணவனை கல்லால் அடித்து காயப்படுத்திய பேருந்து ஓட்டுநர் - அரசு பேருந்தை மறித்து மாணவர்கள் போராட்டம்

மாணவனை கல்லால் அடித்து காயப்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தந்தி டிவி

மாணவனை கல்லால் அடித்து காயப்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தில் கோடாங்கிபட்டியில் ஏறிய பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் நின்று கொண்டு பயணித்துள்ளனர். அவர்ககளிடம் மேலே ஏறி வருமாறு ஓட்டுநர் கனகராஜ் கூறியுள்ளார். அதனை மாணவர்கள் கேட்காததாக கூறப்படும் நிலையில், ஓட்டுநர் கனகராஜ் கல்லால் மாணவர்களை தாக்கியுள்ளார். இதில் பழைய செம்பட்டியை சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவன் முத்துராஜா என்பவருக்கு தலையில் இரத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுனரை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அடுத்து, சின்னாளப்பட்டி போலீசார் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்