தமிழ்நாடு

அரசு ஊழியர், பரிசு பெறக்கூடாது என மனு - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் அதிகாரிகள் பரிசுப் பொருள் பெற கூடாது என வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம், கீழ் அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் சம்பத், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆங்கிலேயர் ஆட்சியில், புத்தாண்டை ஒட்டி, சார்பு பணியாளர்கள், உயரதிகாரிகளுக்கு பரிசுப்பொருள் வழங்கியதாகவும், அது இன்றும் கடைபிடிக்க படுவதாகவும் மனுவில் அவர் சுட்டிக்காட்டினார். உயர் அதிகாரிகளிடம் இருந்து பிரதிபலனை எதிர்பார்த்தே, பரிசுகள் வழங்கப்படுவதாக மனுவில் கூறிய சம்பத், பரிசுப் பொருள் கொடுப்பது மற்றும் பெறுவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளை அமல்படுத்துமாறு, அனைத்து அரசுத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு மனுவில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஆஷா அடங்கிய அமர்வு, இரண்டு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், லஞ்ச ஒழிப்பு துறைக்கும் உத்தரவிட்டது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா