தமிழ்நாடு

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு ரூ. 200 - 500 வரை ஆண்டு கட்டணமாக நிர்ணயம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு பள்ளிக்கல்வித்துறை நிர்ணயித்துள்ள கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி

* தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆங்கில வழி வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டண விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளார்.

* அதன் படி 1 முதல் 8 ஆம் வரை ஆங்கில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 200 ரூபாயும் , 9 மற்றும்

10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 250 ரூபாயும், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாயும் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

* கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாயும் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்டணங்களை மீறி அதிக கட்டணங்களை தலைமையாசிரியர்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்