தமிழ்நாடு

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு அரசு நோட்டீஸ்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதவர்களுக்கு, 17 பி பிரிவின் கீழ், நோட்டீஸ் அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மீது, 17 பி பிரிவின் கீழ் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு பதிலாக 7500 ரூபாய், சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும், என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை முதல், ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பும் பணியும், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியும் தொடங்க உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்