தமிழ்நாடு

"அரசு வேலை.." - ஆசை வலையை வீசி நூதன மோசடியில் ஈடுபட்ட நபர்

தந்தி டிவி

ஈரோடு மூலப்பாளையத்தை சேர்ந்த ராஜேஷ் மார்ட்டீன், கடந்த 2019ஆம் ஆண்டு கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய போது, அதே நிறுவனத்தில் பணிபுரியும் பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பார்த்திபன், தனது நெருங்கிய நண்பர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதகா ராஜேஷிடம் கூறியுள்ளார். இதனை நம்பிய ராஜேஷ், தான் உட்பட தனது நண்பர்கள் பணம், 20 லட்ச ரூபாயை பார்த்திபன் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். ஆனால், பார்த்திபன் வேலை தாங்கி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், ஏற்கனவே பார்த்திபன் இது போல் பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்