அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் சூர்யபிரகாசம் என்பவர், தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். ஏற்கனவே டெங்கு பாதிப்பை தடுக்க கோரிய மனுவோடு, கூடுதல் மனுவாக இந்த மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.