தமிழ்நாடு

அரசு குழந்தைகள் இல்ல சிறுமி தப்பி ஓட்டம் - ஆந்திராவை சேர்ந்த சிறுமியை தேடும் பணி தீவிரம்

அரசு குழந்தைகள் இல்ல சிறுமி தப்பி ஓட்டம் - ஆந்திராவை சேர்ந்த சிறுமியை தேடும் பணி தீவிரம்

தந்தி டிவி
அரசு குழந்தைகள் இல்ல சிறுமி தப்பி ஓட்டம் - ஆந்திராவை சேர்ந்த சிறுமியை தேடும் பணி தீவிரம்

தஞ்சை அரசு குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் இருந்த ஆந்திர சிறுமி தப்பி ஓடிய நிலையில் அவரை தேடும் பணி நடந்து வருகிறது.தஞ்சை மாரியம்மன் கோயில் பகுதியில் ஆந்திராவை சேர்ந்த சிறுமி கடந்த ஜூலை மாதம் தனியே சுற்றித்திரிந்த நிலையில் அவரை போலீசார் மீட்டனர். அப்போது சென்னையில் வீட்டு வேலை செய்வதற்காக பெற்றோர் தன்னை விற்று விட்டதாகவும், வேலை செய்ய பிடிக்காததால் தப்பி வந்ததாகவும் கூறினார். இதையடுத்து அந்த சிறுமி தஞ்சையில் உள்ள அரசு குழந்தைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். சிறுமியை பெற்றோர்களிடம் ஒப்படைப்பதற்கான பணிகள் நடந்து வந்த நிலையில் திடீரென சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மாடியிலிருந்து அவர் தப்பிச் சென்றிருக்கலாம் என தெரியவந்ததை தொடர்ந்து சிறுமியை தேடும் பணி நடந்து வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்