தமிழ்நாடு

அரசு பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்ட மாணவன் - தலைமை ஆசிரியரோடு பெற்றோர் வாக்குவாதம்

அரசுப் பள்ளியில் மாணவனை சேர்க்க மறுத்ததால் தலைமை ஆசிரியருடன் பெற்றோர் வாக்கு வாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

தந்தி டிவி

கோவை மாவட்டம், ஒண்டிபுதூர் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்த கணேஷ்பாபு என்பவர், தமது மகன் ஸ்ரீராமை சேர்க்க வந்துள்ளார். ஸ்ரீராம் முன்னர் படித்த அரசு பள்ளியில் வழங்கிய மாற்றுச்சான்றிதழில் பத்தாம் வகுப்பு இடைநிறுத்தம் எனவும், படித்தது ஒன்பதாம் வகுப்பு என்றும் இருந்ததால், பள்ளியில் சேர்ப்பதில் தலைமையாசிரியர் ரவீந்திரன், உதவி தலைமையாசிரியர் சிவக்குமார் ஆகியோர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஆசிரியர்கள் தம்மை தாக்கியதாக கணேஷ்பாபு சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோ வேகமாக பரவியது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அதிகாரி , ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும், மாணவனை இடையர்பாளையம் அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்

MK Stalin Health| ஸ்டாலினுக்கு திடீர்னு என்னாச்சு? - திமுகவினருக்கு துரைமுருகன் சொன்ன பரபரப்பு தகவல்

Driving License | இன்று முதல் டிரைவிங் லைசென்ஸ் பெற புதிய நடைமுறை - தமிழகத்திற்கே இன்ப செய்தி

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்