தமிழ்நாடு

எழும்பூர் - நாகர்கோவில் இடையே 12 சரக்கு ரயில்கள் ஏப்ரல் 9- 14ஆம் தேதி இயக்கம்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல் 14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இன்று முதல்,14ஆம் தேதி வரை 12 சரக்கு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட செய்தி தொடர்பு அதிகாரி வீராசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், எழும்பூரில் இருந்து 9ஆம்தேதி அதிகாலை 5 மணிக்கு புறப்படும் சரக்கு விரைவு ரயில், இரவு 7 மணிக்கு நாகர்கோவிலை சேரும் என கூறியுள்ளார். அதேநாளில், காலை 8 மணிக்கு நாகர்கோவிலில் புறப்படும் மற்றொரு சரக்கு விரைவு ரயில், இரவு 10 மணிக்கு எழும்பூரை அடையும் எனக் கூறியுள்ளார். இந்த ரயில்கள், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை ஆகிய இடங்களில் நின்று செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்