தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.768 குறைவு

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 768 ரூபாய் குறைந்துள்ளது.

தந்தி டிவி

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலையில் கிராமுக்கு 79 ரூபாயும், மதிய நிலவரப்படி 17 ரூபாயும் குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் கிராமுக்கு 96 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கமானது 4517 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சவரனுக்கு இன்று ஒரே நாளில் 768 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 36 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று கிலோவுக்கு 2100 ரூபாய் குறைந்து ஒரு கிலோ பார் வெள்ளி 68 ஆயிரத்து 800 ரூபாயாக உள்ளது.

கடந்த 13 ஆம் தேதி ஒரு சவரன் தங்கமானது 37 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று அதிரடியாக குறைந்து 36 ஆயிரத்து 136 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி