தமிழ்நாடு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைவு

ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

தந்தி டிவி
கடந்த சில மாதங்களாக ஏற்றம் கண்டு வந்த ஆபரண தங்கம் விலை, கடந்த வாரத்தில் இதுவரை இல்லாத உச்சமாக 30 ஆயிரத்து 120 ரூபாய் வரை விற்பனை ஆனது. இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதிக்குப் பின் தங்கத்தின் விலை சரிந்து வருவதுடன், ஒரு வாரத்தில் ஆயிரம் ரூபாய் வரை விலை குறைந்துள்ளது. நேற்று 29 ஆயிரத்து 192 ரூபாயாக இருந்த ஒரு சவரன் தங்கம், இன்று 120 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 72 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்க நகை 3 ஆயிரத்து 634 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், விலை மேலும் குறையலாம் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்