தமிழ்நாடு

தொடர் உச்சத்தில் தங்கம் விலை: ஒரு சவரன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை நெருங்கியது - ஒரு கிராம் 4,978 ஆக விற்பனை

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில், சவரனுக்கு 39 ஆயிரத்து 824 ரூபாயாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

தந்தி டிவி

தங்கம் விலை இதுவரை இல்லாத வகையில், சவரனுக்கு 39 ஆயிரத்து 824 ரூபாயாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலை இன்று காலை நிலவரப்படி, சவரனுக்கு 592 ரூபாய் அதிகரித்துள்ளது. இதையடுத்து ஒரு சவரன் விலை 39 ஆயிரத்து 824 ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஒரு கிராம் தங்கம் விலை 4 ஆயிரத்து 978 ரூபாயாக விற்பனையாகிறது. தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்து வரும் நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தொற்று அச்சம் தொடங்கியதில் இருந்து தங்கத்தின் விலை சுமார் 8 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பித்தக்கது

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?