ஆபரண தங்கம் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு 312 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 720 ரூபாயாக விற்பனையாகிறது. இன்று காலை சவரனுக்கு 216 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலை நிலவரப்படி மீண்டும் 96 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ஒரே நாளில் 39 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 965 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் 312 ரூபாய் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.