தமிழ்நாடு

பரோலில் சென்ற குற்றவாளி தலைமறைவு - 7 ஆண்டுகளுக்கு பின் பிடிபட்டார்

ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி, கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் 2013ஆம் ஆண்டு உயிரிழந்த தனது தாயின் இறுதி சடங்கில் கலந்துக்கொள்ள ஒருவார கால பரோலில் சென்ற முத்துசாமி, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார். இதுதொடர்பாக சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், 7 ஆண்டுகளுக்கு பிறகு சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு நின்றிருந்த முத்துசாமியை கைது செய்தனர். பின்னர் மதுரை மத்திய சிறைச்சாலையில் முத்துசாமி அடைக்கப்பட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை