தமிழ்நாடு

வீட்டிற்கு சென்று கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

வீட்டிற்கு சென்று கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

தந்தி டிவி

வீட்டிற்கு சென்று கொரோனா தடுப்பூசி - சென்னை மாநகராட்சி அறிவிப்பு

வீட்டிற்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்துள்ளது.80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு, அவர்களின் இருப்பிடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னை மாநகாரட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்களின் வசதிக்காக, சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.இதன்படி, 044-2538 4520 மற்றும் 044-4612 2300 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளது.மேலும், சென்னையில் இதுவரை 25 லட்சத்து 14 ஆயிரத்து 228 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும்,10 லட்சத்து 54 ஆயிரத்து 704 நபர்களுக்கு 2 ஆம் தவணை தடுப்பூசி என மொத்தம் 35 லட்சத்து 68 ஆயிரத்து 932 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்