தமிழ்நாடு

ஞானவேல் ராஜா வீட்டில் மாயமான நகைகள்! - த*க்கு கொலை முயன்ற பணிப்பெண்..விசாரணையில் அடுத்தடுத்து வெளியான தகவல்கள்

தந்தி டிவி

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் வீட்டில் நகைகள் திருடு போன புகாரில், வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் ஞானவேல் ராஜா. இவரது மனைவியின் நகைகள் கடந்த 13 ஆம் தேதி திடீரென வீட்டில் இருந்து காணாமல் போனதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வீட்டு பணிப்பெண்ணான லட்சுமி என்பவரை, ஞானவேல் ராஜாவின் மனைவி விசாரணை நடத்தியதில், அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. இந்த விசாரணைக்கு பிறகு லட்சுமி மீண்டும் வேலைக்கு வராததால் சந்தேகமடைந்த ஞானவேல் ராஜா சென்னை, மாம்பலம் போலீசில் புகாரளித்திருக்கிறார். இந்நிலையில், இது குறித்தான விசாரணைக்கு காவல் நிலையத்தில் ஆஜரான லட்சுமி, தான் நகைகளை திருடவில்லை என உறுதியாக கூறி விட்டு வீடு திரும்பிய நிலையில், திடீரென விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் லட்சுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், மாம்பலம் காவல்நிலையத்தில் புகாரளித்த அவரின் மகள், தன் தாய் மீது பொய் புகாரளித்த ஞானவேல் ராஜா, மற்றும் அவரின் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திருக்கும் நிலையில், இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்