2025ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமானோர் அவருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்... இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வைரமுத்து, இது தமிழுக்கு கிடைத்த கெளரவம் என்றும், இந்த விருது கிடைத்த நேரத்தில் தனது தாய், தந்தை, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் இல்லாதது வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தமிழில் கவிஞர் ஒருவருக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார்