மின்னொளியில் மலைகளின் இளவரசி - திக்குமுக்காடும் சாலைகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானல், இரவு நேரத்தில் மின்னொளியில் ஜொலிக்கும் ட்ரோன் காட்சி வெளியாகி,பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின் சுற்றுலா வாசிகளின் வரவு அதிகரித்துள்ளதால், அப்பகுதியில் அமைந்துள்ள விடுதிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இந்த நிலையில், இரவு நேரத்தில், கொடைக்கானல் மின்னொளியில் ஜொலிக்கும் ட்ரோன் காட்சி வெளியாகியுள்ளது. மேலும், வாகனங்களின் வரத்தால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.