தமிழ்நாடு

Love Issue| காதலன் உடலை படமெடுத்து வாட்ஸப்பில் அனுப்பிய காதலி.. வீட்டின் முன் குவிந்த கூட்டம்

காதலன் உடலை படமெடுத்து வாட்ஸப்பில் அனுப்பிய காதலி.. வீட்டின் முன் குவிந்த கூட்டம்

thanthitv

காதலன் உடலை படமெடுத்து வாட்ஸப்பில் அனுப்பிய காதலி.. வீட்டின் முன்பு குவிந்த கூட்டத்தால் பெரும் பதற்றம் #aranthangiloverissue #loveissue புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே காதலியின் வீட்டில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அறந்தாங்கி அருகே, கொல்லன்வயல் பகுதியைச் சேர்ந்த தங்கராசுவின் 27 வயது மகன் முருகன், அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.. இந்நிலையில், அந்த பெண்ணின் அழைப்பின் பேரில் அவரது வீட்டிற்கு முருகன் சென்றுள்ளார். அங்கு வீட்டிற்குள் அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். முருகன் உயிரிந்த நிலையில் அவரது புகைப்படத்தை செல்போனில் எடுத்து, அவரது காதலி முருகனின் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளார். முருகனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரது மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பெண்ணின் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, முருகனின் காதலி, அவரது தாயார் மற்றும் அவரது தாய்மாமன் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அறந்தாங்கி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். முருகனின் உடல் உடற்கூராய்வுக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தை அறந்தாங்கி துணை காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் மற்றும் வட்டாட்சியர் கவியரசு ஆகியோர் பார்வையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Murder Case செங்கல்பட்டில் ரத்தம் தெறிக்க வெட்டப்பட்ட `வீரா’ - மனசுக்குள் வைத்து குலையறுத்த பயங்கரம்

E V Velu | Chennai HC | "எ.வ.வேலு தான் வெற்றி பெற்றார்" உயர்நீதிமன்றம் அதிரடி

CM விஜயின் தொகுதியா? Min.ராஜ்மோகன் தொகுதியா?நாளைக்கு தெரிஞ்சிட போகுது

Dharapuram By Election | TVK | தாராபுரம் இடைத்தேர்தல்..தவெக வேட்பாளர் சத்தியபாமா வேட்புமனு தாக்கல்

Anbil Mahesh Raid | ``மேலிட உத்தரவுக்காக காத்திருக்கும் CCB போலீசார்’’-ரெய்டில் எதிர்பாரா திருப்பம்